உலகில் இருக்கின்ற சகல பிள்ளைகளும் தெரேசாவை அம்மா என்றே அழைப்பார்கள். “அன்பினுள் நேர்ந்த அழைப்பு “ என்னும் பெயரில் கல்கத்தாவை மத்திய நிலையமாக ஆரம்பித்த அவர் அதனூடக ஏழ்மை ஆனவர்களுக்கு பெரும் சேவை ஆற்றினார். அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கொன்ஹா பொஜாக்ஹியூ ஆகும். அவர் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி யூகோஸ்லாவியாவின் உஸ்குப் நகரத்தில் பிறந்தார். குடும்பத்தில் இளயவராக இவர் 1915ம் ஆண்டு முதல் பாடசாலைக் கல்வியை தொடர்ந்தார். அவர் கொறேசியன் மொழியிலேயே தனது கல்வியைத் தொடர்த்தார். தனது 13வயதிலேயே தேவாலய நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக்கொண்டார். 1924ம் ஆண்டு தனது கல்வியை நிறைவு செய்துகொண்ட அவர் 1928ம் ஆண்டு லெரேடாவில் அருட்சகோதரி ஆனார். அதனோடு மதநடவடிகைகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.
1929ம் ஆண்டு அவருக்கு முக்கியமான ஆண்டாக இருந்தது ஏன் எனில் ஆசிரியர் தொழிலுக்காக அவர் இந்தியாவிற்கு வருகை தந்தார். இந்த நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றவேண்டுமாயின் இந்த நாட்டின் மொழிகளை கற்க வேண்டும் என அவர் நினைத்தார். அதனால் அவர் ஹிந்தி மற்றும் வங்காளி மொழிகளைக் கற்ரறிந்துகொண்டார். 1937ம் ஆண்டு மே மதம் 24ம் திகதி அவர் அருட்சகோதரி ஆனார். அருட்சகோதரியான அவருக்கு கிடைத்த பெயர்தான் தெரேசா.அதற்கு பின்னர் அவர் தெரேசா அருட்சகோதரியாக அடையாளப் படுத்தப்பட்டார் .இந்தியாவில் மூலைமுடுக்குகளில் வாழ்கின்ற பிள்ளைகளை கண்டு அவர் துன்பமடைந்தார் .பல நாட்கள் கன்னியர் மடத்திலிருந்து விலகியிருந்த அவர் கல்கத்தா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றோருக்கு உதவி ஒத்திகை புரிந்து வந்தார்.
துன்பப்படுகின்ற நோயாளர்கள் பிள்ளைகள் இருகின்ற இடங்களை தேடிசென்ற அவர் மிகப்பெரிய சமுக சேவைகளை செய்தார். "அன்பினுள் நேர்ந்த அழைப்பு" இன்றேல் "கருணையின் ஊடாக துன்பத்தில் இருந்து விடுபடல்" எனும் பேரில் கல்கத்தா மத்திய நிலையத்தின் ஊடக ஏழ்மையின மக்களுக்கு விசேடமான சேவையை செய்தார். 1952ம் ஆண்டு நிர்மல் ஹரிதாய் எனும் பெயரில் இல்லம் ஒன்றை ஆரம்பித்தார். இவ்இல்லத்தினால் நோயினால் துன்பப்பட்ட நோயாளர்கள் சுகம் அடைந்தனர்.
இவ்வாறான சமூக சேவைகளினால் அவருக்கு பல விருதுகள் கிடைத்தன. 1962ம் ஆண்டு பாரதத்தில் பத்மஸ்ரீ விருது 1971ம் ஆண்டு பாபரசரின் பரிசு,1972ம் ஆண்டு ஜவகர்லால் நேரு விருது 1980ம் ஆண்டு பாரத ரத்னா விருது மற்றும் பிரித்தானிய மகாராணியின் சிறந்த அர்ப்பணிப்பாளர் விருதும் யுனஸ்கோ கல்வி சமாதான பரிசும் அன்னை தெரேசாவுக்கு கிடைத்தது. அவர் பெற்றுகொண்ட பரிசு மற்றும் விருதுகளில் 1979ம் ஆண்டு பெற்றுகொண்ட நோபல் சமாதான விருது மிகவும் உயர்ந்த விருதாகும்.
அவர் இருதய நோய்க்கு இலக்காகி துன்பபட்டாலும் அவர் தன்னுடைய சமூக சேவையை கைவிடவில்லை. எனினும் அவருடைய நோயும் குணமடையவில்லை. உலகின் அனைவரினதும் கண்களில் கண்ணீரை மல்கவைத்து தனது 87ம் வயதில் 1997ம் ஆண்டு 09ம் மாதம் 02ம் திகதி இறைபதம் அடைந்தார். அவர் தனது இறுதி காலத்தில் தன்னுடைய நோயை விடவும் சமூக சேவையே பெறுமதியானது என்றே எண்ணிகொண்டு இருந்தார்.
No comments:
Post a Comment